பிரதமர் நரேந்திர மோடி புதிய கன்றுக்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை மத்திய அமைச்சர் எல்.முருகன் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது பாரதப் பிரதமர் மோடி இல்லத்தில் வளர்ந்து வரும் பசு, புதிய வரவாக கன்று ஈன்றுள்ளது.
நெற்றியில் விளக்கொளி போன்ற வடிவில், வெள்ளை நிறத்தில் பிரகாசமான அடையாளத்துடன் பிறந்துள்ள இந்த கன்றுக்குட்டிக்கு ‘தீப்ஜோதி’ என்று பெயரிட்டுள்ள நமது பிரதமர், அதனுடன் மகிழ்ந்து விளையாடிய அழகிய தருணம் என தெரிவித்து வீடியோவை பதிவிட்டுள்ளார்.