திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதால், முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகரன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதாகவும், அதனால் அவர் முன்னுக்குப் பின் முரணாய் பேசி வருவதாக தெரிவித்தார். திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்
கைது நடவடிக்கையை தவிர்க்க எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் B டீமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்மறையாக பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதால் சீமான் தரம் தாழ்த்தி பேசி வருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.