மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்கிறது.
18-வது மக்களவைத் தோ்தல் முடிவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி தொடா்ந்து மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அவருடன் 72 அமைச்சா்கள் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.
தோ்தலுக்கு முன்னதாகவே அடுத்த ஆட்சியில் முதல் 100 நாள்களுக்கான செயல்திட்டத்தை தயாா்ப்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சகங்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
முதல் 100 நாள்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துடன் காரீஃப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம், சோயா, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி உயா்வு என வேளாண் துறையிலும் கவனம் ஈா்க்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 4-ஆம் கட்ட பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் 25,000 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை வழங்கும் வகையில் 62,500 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதையும் ஸ்டாா்ட்அப்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களை ஆதரிப்பதையும் இலக்காகக் கொண்டு ‘அக்ரிஸுா்’ என்ற புதிய நிதி உள்ளட்ட பல்வேறு திட்டங்களைற மத்திய அரசு தொடங்கியுள்ளது.