மீலாது நபி பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களது பிறந்த தினமான, மீலாதுன் நபி பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவர் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.