தமிழர்களின் தற்காப்பு கலை : தழைத்தோங்கும் சிலம்பம் - சிறப்பு தொகுப்பு
Jul 17, 2025, 11:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழர்களின் தற்காப்பு கலை : தழைத்தோங்கும் சிலம்பம் – சிறப்பு தொகுப்பு

Web Desk by Web Desk
Sep 18, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்களின் வீர விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் உரிய அங்கீகாரம் வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. தற்காப்புக் கலைகளுக்கு முன்னோடியாக திகழும் சிலம்பக் கலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

பண்டைய தமிழர்கள் வனவிலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்திப் போராட தொடங்கிய காலத்தில் முதலில் கையில் எடுத்த ஆயுதம் கம்பு என்பது வரலாறு. பிற்காலத்தில் அதுவே சிலம்பக்கலையாக மாறியது. திருக்குறள், கலிங்கத்துப்பரணி, திருவிளையாடல் புராணம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க கால நூல்களில் எல்லாம் சிலம்பம் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.

தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் எண்ணற்ற கலைகள் இருந்தாலும் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பது சிலம்பாட்டம் மட்டுமே. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வழிப்பறி, செயின் பறிப்பு என பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு தற்காப்புக்கலையை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சிலம்ப பயிற்சிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிகளவு பங்கேற்று சிலம்பக் கலையை கற்று வருகின்றனர். தான் கற்றிருக்கும் சிலம்பக் கலையையே தனக்கு பாதுகாப்பாக விளங்குவதாக கூறுகிறார் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வரும் வீராங்கனை யுவஸ்ரீ.

தற்காப்பு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் சிலம்பத்தில் உள்ள அனைத்து விதமான கலைகளையும் கற்பதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிலம்பக் கலை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருவியாக இருப்பதோடு அவர்களுக்கான பாதுகாப்பு உணர்வையும் தந்திருக்கிறது.

அடிமுறை, தொடுமுறை, சுற்றுமுறை என பல்வேறு வகைகளில் கற்றுத்தரப்படும் சிலம்பத்தை கற்பதில் ஆர்வம் காட்டும் அதே நேரத்தில், காலை 6 மணி முதல் 8 மணி வரை சிலம்பம் விளையாடுவது உடலுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் அடிப்படை சிலம்பக் கலையை கற்றுக் கொள்ளலாம் என்கிறார் பயிற்சியாளர் பொன் சதீஷ்

உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை ஆகியவற்றுக்கு உதவும் சிலம்பக் கலை தோன்றி ஐந்தாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் அனைத்து தரப்பு மக்களாலும் தவிர்க்க முடியாத கலையாக விளங்கி வருகிறது. ஆண் ,பெண் என்ற வேறுபாடின்றி அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதக் கலை தான் இந்த சிலம்பம்..

Tags: Kambuancient Tamils ​​tamilnaducentral governmentSilambattam
ShareTweetSendShare
Previous Post

நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம், உங்களை கொஞ்சம் திரும்பி பாருங்கள் – ஈரானுக்கு இந்தியா எச்சரிக்கை!

Next Post

ஜம்மு – காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

Related News

டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் இந்துக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியம – சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் விரிவாக விளக்கம்!

திருப்பூரில் நவீன இயந்திரம் விற்பதாக கூறி பண மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா!

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு – எல்.முருகன் விமர்சனம்!

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செயல்படாத கணினி – பொதுமக்கள் அவதி!

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு – 4 சீனியர் மாணவர்கள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே சிறிய அளவிலான துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – மீனவர்கள் கோரிக்கை!

காமராஜர் குறித்து பேசியதை விவாதம் ஆக்க வேண்டாம் – திருச்சி சிவா வேண்டுகோள்!

சோழவந்தானில் குண்டும், குழியுமாக உள்ள மேம்பாலம் – பயணிகள் அவதி!

ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப பல்லக்கு சேவை கோலாகலம்!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி முறைகேடு – 4 ஊழியர்கள் பணிநீக்கம்!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்து – நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருக்குறள் பிழையாக பொறிக்கப்பட்டதற்கு தாமே பொறுப்பு – மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம்!

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சென்னை விம்கோ நகரில் புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதாகக்கூறி பயணிகள் மறியல் – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies