திருநெல்வேலி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதற்கு சில காலம் ஆகுமெனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்த தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதாகவும், ரயில்களை பராமரித்து பழுதுபார்க்கும் பணிமனை பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.