கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி கோயில் உட்பிரகாரத்தில் அமர்ந்து பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகரின் மையப் பகுதியில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில், கடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது வீதி உலா சென்ற நடராஜர் சிலை உடைந்து சேதமானது.
நடப்பாண்டு கல்யான பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜர் அபிஷேகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அபிஷேகம் நடைபெறவில்லை எனக்கூறி சிவனடியார்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடராஜர் அபிஷேகம் பார்த்த பிறகுதான் செல்வோம் எனக் கூறி, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கோயிலில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஓதுவார், புதிதாக நடராஜர் சிலை செய்ய பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் நடராஜர் படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.