சென்னை காசிமேட்டில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்கள் போல உடையணிந்து கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காசிமேடு பகுதியில் உணவு டெலிவரி நிறுவன உடைகளில் வரும் நபர்கள் வீடு வீடாக கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், காசிமேடு சுரங்கபாதை அருகே கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வேலு மற்றும் அஜித் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.