ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் 1-0 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
ஆசிய சாம்பியன்ஸிப் கோப்பை ஹாக்கிப் போட்டி சீனாவின் ஹுலுன்பியர் நகரில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து அரையிறுதியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொண்டது. இதில், சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
நடப்புத் தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை சென்று பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.