குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீடு - NPS வாத்சால்யா திட்டத்தின் சிறப்பம்சம்!
Aug 19, 2025, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீடு – NPS வாத்சால்யா திட்டத்தின் சிறப்பம்சம்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

NPS வாத்சால்யா திட்டத்துக்கான இணையத் தளத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார். மேலும், புதியதாக பதிவு செய்யப்படும் குழந்தைகளுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் கொண்ட PRAN அட்டைகளையும் வழங்கியுள்ளார். இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் NPS வாத்சால்யா திட்டத்தைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் பங்களிப்புடன்
NPS வாத்சால்யா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 18 வயது ஆனவுடன் திட்டத்தை தடையின்றி வழக்கமான தேசிய ஓய்வூதிய கணக்காக மாற்றலாம் என்றும், கடந்த ஜூலை மாதம், நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய நிதி அமைச்சர், அதற்கான பிரத்யேக இணையத் தளத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

குழந்தைகளின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக ஆரம்பத்திலேயே, முதலீடு செய்யத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள NPS வாத்சால்யா திட்டத்தை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

NPS வாத்சல்யா மூலம் ஓய்வூதியக் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிக்க முடியும் என்றும், NPS வாத்சல்யாவின் கீழ்,

குறைந்தபட்ச பங்களிப்பு ஆண்டுக்கு 1000 ரூபாயாக இருக்கலாம் என்றும், அதிகபட்ச பங்களிப்புக்கு வரம்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

NPS வாத்சல்யா திட்டத்தில் சேமிக்கப்படும் தொகையை, கணக்கு தொடங்கியதில் இருந்து 3 ஆண்டுகள் வரை திரும்பப் பெற முடியாது என்றும், மூன்று ஆண்டுகளுக்குப் பின் கல்வி, குறிப்பிட்ட நோய் காரணங்களுக்காக மட்டும் 25 சதவீத வரை திரும்ப பெறலாம் என்றும், அதிகபட்சமாக மூன்று முறை இந்த காரணங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெறுவதற்கும் இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதலீடு 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேலிருந்தால் அவற்றில் 80 சதவீதம் ஓய்வூதிய தொகுப்பு நிதியாக வைத்தது போக , மீதமுள்ள 20 சதவீதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், மொத்தப் பணத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPS வாத்சல்யா கணக்கில் சேரும் தொகையை, எதில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்பதையும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில், பங்குசந்தையில் 75 சதவீதமும், லைப் சைக்கிள் பண்ட்டில் 25 சதவீதமும், அல்லது

பங்குசந்தையில் 25 சதவீதமும், லைப் சைக்கிள் பண்ட்டில் 75 சதவீதமும் முதலீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. முதலீடு தேர்வு செய்யாதவர்களுக்கு , மாடரேட் லைப் சைக்கிள் பண்ட் என்ற பெயரில் 50 சதவீத தொகை பங்குச் சந்தை முதலீடாக தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒருவேளை மரணம் நேர்ந்தால் , கணக்கில் சேர்ந்துள்ள தொகை முழுவதும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு வழங்கப் படும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு குறைந்த பான் அட்டை உள்ளவர்களும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குழந்தைகளும் இந்த NPS வாத்சல்யா திட்டத்தில் சேரலாம்.

NPS வாத்சல்யா கணக்குத் தொடங்குவதற்கு, சிறுவர் சிறுமியரின் பான் அட்டை, பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் KYC ஆவணங்கள் சமர்பிக்கப்படவேண்டும். NPS வாத்சல்யா கணக்கை முக்கிய அரசு வங்கிகள்,அஞ்சல் நிலையங்கள், e-NPS இணையதளம் மூலம் தொடங்கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த NPS வாத்சல்யா திட்டம்,சிறு வயதிலிருந்தே முதலீட்டுத் தேர்வுகளும் மற்றும் வலுவான நிதிநிலையையும் உறுதிப்படுத்த உதவுகிறது.

Tags: Finance Minister Nirmala SitharamanNPS Vatsalya SchemePRAN cardsindia's pension system
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Next Post

குவாட் மாநாட்டில் பங்கேற்க நாளை அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

Related News

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies