சேலத்தில், மதுபோதையில் விநாயகர் சிலையை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாதகாப்பட்டி பகுதியில் ஸ்ரீவழி வாய்க்கால் காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலையின் கைப்பகுதி உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், , பூபதி, மணிரத்தினம் ஆகிய இருவரை கைது செய்தனர்.