தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அனைத்து கட்சிகளும் மதுவிலக்கில் உடன்படுவதாவும், ஆனால் அதே வேளையில் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மதுவிலக்கு தேவை என்ற கருத்தில் அனைத்து கட்சிகளும் உடன்படும்போது எதற்காக டாஸ்மாக்? என கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும் என்றும், அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்தால் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளை மூட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.