குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை “ஏ.ஆர். ஃபுட்ஸ் நிறுவனத்திலிருந்து எந்த கோயிலுக்கும் நெய் வாங்க கூடாது என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை, தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
திருப்பதி கோயில் லட்டுவின் புனிதத்தை கெடுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குற்றச்சாட்டில் இருந்து விடுபடும் வரை ஏஆர் புட்ஸ் நிறுவனத்திலிருந்து நெய் வாங்க கூடாது என தெரிவித்தார்.
கோயில்களின் புனிதம் காக்க இந்து மத நம்பிக்கை உள்ளவர்களிடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், “ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது இந்துக்கள் அல்லாதவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டதா கூறினார்.
தமிழக அரசை தட்டிக்கேட்கும் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படுவதாகவும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்யாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர் காவல்துறை கையில் இருக்கும் காரணத்தால், பொய்வழக்கில் பாஜக நிர்வாகிகளை கைது செய்கின்றனர் என்றும், அதனை திமுக அரசு திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் .