பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவையொட்டி, பர்னாய் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியானது சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகிலேயே 5ஆவது பொருளாதாரமாக முன்னேறியதை மேற்கொள் காட்டிய ஜெ.பி.நட்டா, விரைவில் 3ஆவது இடத்தை தேசம் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வாகன உதிரி பாக உற்பத்தியில் இந்தியா 3-ஆம் இடத்தில் இருப்பதாகவும், 97 சதவீத கைப்பேசிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா விரைவாக வளர்ச்சியடைவதாக கூறிய ஜெ.பி.நட்டா, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.