மனைவியுடன் விவாகரத்து : பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? ஜெயம் ரவி விளக்கம்!
Oct 14, 2026, 07:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனைவியுடன் விவாகரத்து : பாடகி கெனிஷாவுடன் தொடர்பா? ஜெயம் ரவி விளக்கம்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்த நிலையில், கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா என்பவருடன், ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல்களும் பேசு பொருளாகின. இந்த நிலையில், தமக்கும், கெனிஷாவிற்கும் இடையே எந்த தவறான தொடர்பும் இல்லை என ஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார்.

பாடகி கெனிஷா பற்றி ஜெயம் ரவி உயர்வாக பேசிய காட்சிகள் தான் இவை…. பாடகியாக மட்டுமின்றி, ஒரு நல்ல மனோதத்துவ நிபுணராக பல நூறு பேரை குணமடையச் செய்திருக்கிறார் கெனிஷா என்றும் குறிப்பிட்டார் ஜெயம் ரவி….

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனி இடத்தை பிடித்துள்ள ஜெயம் ரவியின் சினிமா கெரியர், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு முன்னேற்றம் அடைந்தது என்று தான் கூற வேண்டும்.

தனக்கான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஜெயம் ரவி மிகத் தெளிவாக இருப்பவர் என்றும் திரைத்துறையினர் கூறுகின்றனர். அழகான மனைவி ஆர்த்தி, அன்பான மகன்கள் என எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருப்பது போல் தோன்றினாலும், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆனால், தம்மிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தனித்தே எடுத்ததாக ஆர்த்தியும் பதில் அறிக்கை வெளியிட்டதால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் உச்சகட்டத்தில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இது ஒருபுறம் என்றால், ஜெயம் ரவி அடிக்கடி கோவா சென்று அங்குள்ள பாடகி கெனிஷா என்பவருடன் ஒன்றாக நேரத்தை கழிக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகின.

ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்த ஜெயம் ரவி, சென்னையில் நடந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் பாடகி கெனிஷாவை சந்தித்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு நாளடைவில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தான், பாடகி கெனிஷாவை தன்னுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து ஜெயம் ரவி சென்னையில் விளக்கமளித்தார். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் ஜெயம் ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய ஜெயம் ரவி, மக்களை மகிழ்விப்பதே தனது பணி என்று குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவை தன்னுடன் தவறான முறையில் தொடர்புபடுத்தி பேசுவது மிகவும் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக ஜெயம் ரவி- கெனிஷா பற்றி சமூக வலைதளங்களில் பல விதமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி பேசியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Aarti.divorcesinger KenishaJayam Ravi
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பெருமிதம்!

Next Post

ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாக புகார் – டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை!

Related News

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies