டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுத விநியோகம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
இந்நிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை கூறியது.
எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.