இந்தியாவிலேயே தரமான ஆய்வகத்தில் திருப்பதி லட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் விலங்குகளில் கொழுப்புகள் கலக்கப்பட்ட உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இந்தியாவிலேயே தரமான லேப்பில் ஆய்வு நடந்துள்ளது. அந்த ஆய்வில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுடைய மனதை புன்படுத்தியுள்ளது.
விநாயர் சதுர்த்தி பண்டிகைக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. அதற்கு மாறாக அந்த கொள்கைக்கு புறம்பாக இருக்கக்கூடிய ஈவேரா அவர்களுடைய பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி ஒரு பொதுவான நபராக இருக்க முடியும்.
முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது போல விநாயக சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து சொல்லாததை குறிப்பிட்டு பேசினார். முதல் கோணல் முற்றிலும் காரணமாக இருக்கிறது. போக போக தான் தெரியும்.
இலங்கை தேர்தல் முடிவு பற்றிய கேள்விக்கு? இது அண்டை நாட்டினுடைய சமச்சாரம் ..
அந்த நாட்டில் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்களை வாழ்த்துவது தான் நமது நாட்டின் பாரம்பரியம் முறையும் கூட. யார் வெற்றி பெற்றாலும் அங்கு இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்துக்காகவும் மேம்பாட்டிற்காக இந்தியா நட்பு நாடாக இருக்கும் என எல்.முருகன் தெரிவித்தார்.