லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான CYBER ATTACK-ஐப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2009ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் பங்கேற்பதற்காகச் சென்ற பெண் ஒருவர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றது அமெரிக்க உளவு நிறுவனமான CIA. அதற்காக இஸ்ரேலின் MOSSAD-உடன் இணைந்து Stuxnet என்ற வைரஸை உருவாக்கியது. அதுவே உலகின் முதல் DIGITAL ஆயுதம் எனக் கருதப்படுகிறது.
இரண்டாயிரமாம் ஆண்டில் இருந்தே Stuxnet வைரஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த OPERATION-க்கு ‘OLYMPIC GAMES’ என்று பெயர் வைத்திருந்தன. முந்தைய வைரஸ்களைப்போல் அல்லாமல் புதுவிதமாக உருவாக்கப்பட்டது Stuxnet. தொழிற்சாலைகளில் உள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக நடான்ஸ் அணுசக்தி மையத்தில் யூரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படும் மைய விலக்கு சுழற்சிக் கருவியை ATTACK செய்வதே Stuxnet வைரஸின் முக்கியப் பணி.
நடான்ஸ் அணுசக்தி மையத்துக்கும் வெளி உலகுக்கும் இணைய தொடர்பு கிடையாது என்பதால் PEN DRIVE மூலம் முதல் CYBER ATTACK நடத்தப்பட்டது. ஆனால் FIRST VERSION என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அதைவிட பயங்கரமான மோசமான VERSION-ஐ CIA-வும் MOSSAD-ம் உருவாக்கின.
ஒரு கறுப்பு ஆடு மூலம் UPDATED Stuxnet MALWARE, நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள் அனுப்பப்பட்டது. இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது Stuxnet வைரஸ். நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள்ளும் ஈரானின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இன்னும் சொல்லப்போனால் ஈரானைத் தாண்டி பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
Stuxnet வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவிய போதும் OPERATION நிறுத்தப்படவில்லை. சைபர் தாக்குதல் குறித்து ஈரானுக்குத் தெரியாது என்பதால் அதைத் தொடர்ந்து நடத்தின CIA-வும் MOSSAD-ம். ஒருகட்டத்தில் இந்த விஷயம் ஈரான் அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பை அதிகரிக்கத் தொடங்கியது அந்நாட்டு அரசு.
நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்த ஏழாயிரம் மைய விலக்கு சுழற்சி கருவிகளில் ஆயிரம் கருவிகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தாவிட்டாலும் ஈரானின் அணு ஆய்வில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியது. யுரேனியம் செறிவூட்டலை பாதியில் நிறுத்திவிட்டு பாதிப்புக்குள்ளான கருவிகளை மாற்றும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது.
இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் 80 ஆயிரம் கணினிகளை Stuxnet ATTACK செய்ததாகவும் அதனால் முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள், மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத காலத்திலேயே இவ்வளவு வேலைகளை பார்த்த MOSSAD, தற்போதைய TECH யுகத்தில் PAGER வெடிப்பை நிகழ்த்தியதில் ஒன்றும் வியப்பில்லை அல்லவா?