பிரதமர் மோடி தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரவிந்தோ சொசைட்டி சார்பில், 3 நாள் பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா, கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 2 நூல்களை வெளியிட்டார்.
இலக்கிய திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், தனது பள்ளி ஆசிரியை சபீதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பின்னர் விழாவில் பேசிய அவர், நாட்டின் நிதியமைச்சராக இருப்பது மிகவும் கடினமானது என தெரிவித்தார். அனுபவம் வாய்ந்த பிரதமர் நமக்கு கிடைத்துள்ளதால், அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெற்று வருவதாக அவர் கூறினார். மேலும், பிரதமர் பல நாடுகளுக்கு சென்று வருவதால், அந்த நாடுகளில் நமது கலாச்சாரம் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.