கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டக் கோரி பாஜகவினர் காவல் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகி லாக்கெட் சட்டர்ஜி, பிற கட்சியினர் போராட்டம் நடத்த மம்தா பானர்ஜி அனுமதிப்பதாகவும், பாஜகவினருக்கு மட்டும் தடை விதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேற்குவங்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.