இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அனுர குமார திசநாயகே அதிபர் அரியணையில் ஏறிய நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது பற்றி இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்….
இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே
அனுர குமார திசநாயகே – 56,34,915 – 42.31%
சஜித் பிரேமதாசா – 43,63,035 – 32.76%
ரணில் விக்ரமசிங்கே – 22,99,767 – 17.27%
நமல் ராஜபக்ச – 3,42,781 – 2.57%
அனுர குமார-வுக்கு கை கொடுத்த 2வது விருப்ப வாக்குகள்
அனுர குமார திசநாயகே – வாக்குகள் – 56,34,915
2வது விருப்ப வாக்குகள் – 1,05,264
மொத்தம் – 57,40,179
சஜித் பிரேமதாசா – வாக்குகள் – 43,63,035
2வது விருப்ப வாக்குகள் – 1,67,867
மொத்தம் – 45,30,902
ஈழத் தமிழர்களின் ஆதரவு யாருக்கு?
ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சுமார் 40% மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாக்கு எண்ணப்பட்டபோது அனுர குமாரவிற்கு பின்னடைவு
எந்த வேட்பாளருக்கும் 50% அதிகமாக வாக்குகள் கிடைக்காததால், 2வது விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்த ஈழத் தமிழர்கள்
ஈழத் தமிழரின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரியநேந்திரனும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் பெற்றார்
இலங்கை தேர்தல் முடிவு மாறியிருக்க வாய்ப்பு?
அரியனேந்திரன் களமிறக்கப்படாமல் இருந்திருந்தால் தமிழர்கள் ஆதரவு பெற்ற சஜித் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும்
சிங்கள மக்கள் அனுர குமார-வையும், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவிற்கும் ஆதரவளித்துள்ளனர்
ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார இலங்கை அதிபராகி இருக்கும் நிலையில் அடுத்தது என்ன?
இலங்கையில் ஈழத் தமிழருக்கு அதிகாரப் பகிர்வு என்ற சிந்தனையை ஏற்காதவர் அனுர குமார திசநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.