செனகல் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், இதுவரை 30 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோதல், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மேற்கு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அவர்களில் பெரும்பாலானோர் செனகல் கடற்பரப்பு வழியே படகுகள் மூலம் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்வது வழக்கம். அந்தவகையில், 80-க்கும் மேற்பட்டோருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
இதில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.