ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல் - சிறப்பு கட்டுரை!
Oct 3, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட், இந்த ஆண்டுக்கான ‘ஆசியா பவர் இன்டெக்ஸ்’ (API) என்னும் ஆசிய ஆற்றல் குறியீட்டு பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் சீனா தனது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்திவரும் நேரத்தில் இந்த ஆற்றல் குறியீட்டு பட்டியல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்க செயல் திட்டங்களை எதிர்கொள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் போன்ற பல அமைப்புக்களின் கீழ் ஓரணியாக நிற்கின்றன.

ஆசிய நாடுகளில் சீனா, அமெரிக்காவை விட வலிமையான ராணுவத்தைக் கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

இந்தியாவுடன் அதிக ராணுவ பதற்றங்களை ஏற்படுத்தி வரும் சீனா மீது நம்பிக்கை இழந்த தெற்காசிய நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேணி வருகிறது. ஏற்கனவே, தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அமெரிக்காவின் பாரம்பரிய நட்பு நாடுகளாக உள்ளன. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட AUKUS போன்ற புதிய கூட்டணிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் குவாட் ஒரு முக்கிய மையமாகவும் மாறியுள்ளது. 2024ம் ஆண்டில், அமெரிக்க -ஜப்பான் புதிய அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அமெரிக்க அரசு, தென் கொரியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கூடவே, பிலிப்பைன்ஸுடன், புதிய அரசு தரப்பு உறவை அமெரிக்கா, திறம்பட நிர்வகித்து வருகிறது.

ஆசியாவில் ஜப்பானை முந்தி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், மலாக்கா ஜலசந்தியின் கிழக்கே தன் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் இந்தியாவின் ஆற்றல் ஆச்சரியப்பட வைப்பதாக இந்த ‘ஆசியா பவர் இன்டெக்ஸ்’ பட்டியல் குறிப்பிட்டுள்ளது. ஒரு பெரிய சக்தியாக மேலும் வளர்ச்சியடைவதற்கான போதுமான ஆற்றலையும் இந்தியா கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வலுவாக வளர்ந்து வரும் இந்தியா, தெற்காசியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தன் இராஜதந்திர செல்வாக்கை அதிகரித்துள்ளது என்றும் ஆசியா பவர் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான இராஜதந்திரங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் இடத்தை மாற்றியமைப்பதற்கான பிரதமரின் துணிச்சலான லட்சியங்களின் நேரடி விளைவாகவே, சக்தி மிக்க நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் எழுச்சி தற்செயலானது அல்ல என்றும், உலக வல்லரசு அந்தஸ்துக்கு தேசத்தைப் பிரதமர் மோடி உயர்த்தியிருக்கிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியிருக்கிறார்.

2027ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக ஆசியாவின் மூன்றாவது சக்தி மிக்க நாடாக இந்தியா நிமிர்ந்து நிற்கிறது.

Tags: Lowy InstituteAsia Power IndexChina iIndiajapanIndo-Pacific Regionmost powerful country in Asia
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Next Post

தீவுத் திடலில் பட்டாசு கடைகள் – டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies