சுமார் 1,345 மீட்டர் உயரம் கொண்ட ஸ்காட்லாந்தில் உள்ள பென் நெவிஸ் சிகரத்தில் ஏறி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாதனை புரிந்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், United Kingdomஇல் உள்ள உயரமான சிகரமான பென் நெவிஸ் சிகரத்தில் ஏற அனுமதித்ததால் அந்த சவாலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சாதனைய பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் தொலைநோக்குப் பார்வையான “மிஷன் லைஃப்”, ஒரு நிலையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பிரச்சாரம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பயணம் ஆழ்ந்த அறிவூட்டுவதாக இருந்தது, குறைந்தபட்ச வாழ்க்கையின் சாராம்சத்தையும், எங்கள் பயணம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரதத்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீடித்த நட்பின் அடையாளமாக பென் நெவிஸ் சிகரத்தில் எங்கள் திரங்காவை உயர்த்தியதில் நான் பெருமைப்படுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















