தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஒரு ஆண்டு 9 மாதங்களுக்குப் பிறகு அவருக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தற்போது வகிக்கும் துறையுடன் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை சேர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.