தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாக இருந்து மதுரை மாவட்ட ஆசிரியை .சுபஶ்ரீக்கு மனதின் குரல் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தாயின் பெயரில் ஒரு மரம்’ நடுதல் இயக்கத்தை, வலிமையானமொரு இயக்கமாக நாம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுபஶ்ரீ 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து, மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளை பாதுகாத்து பராமரிப்பதில், ஒரு மூலிகைப் பூங்காவையே உருவாக்கியுள்ளார்.
தனது தந்தையை ஒரு முறை பாம்பு தீண்டிய போது, தன்னிடம் இருந்த மூலிகைகளே கொண்டே அவரை நலம்பெறச் செய்துள்ளார். இவ்வாறு, பிற்காலச் சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான தாவரப் பராமரிப்பில் ஈடுபட்டு, முன்னுதாரணமாய் இருந்து வரும் ஆசிரியை திருமதி.சுபஶ்ரீ அவர்களுக்கு, இன்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார்.