மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி குன்னூர் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கல்லார் முதல் குன்னூர் இடையேயான ரயில் பாதையில் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்டவாளம் சேதமடைந்த நிலையில், குன்னூர் புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும், இன்று ஒருநாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.