வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன.
தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக நேர முடிவில் சரிவுடன் நிறைவடைந்தன. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 272 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து 299 புள்ளிகளாக நிலைபெற்றது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான குறியீட்டு எண் நிஃப்டி 368 புள்ளிகள் குறைந்து 25 ஆயிரத்து 810 புள்ளிகளாக சரிவுடன் நிறைவடைந்தது.