நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று, கலைப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மதிப்புக்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.