அறுவடை பாதிக்கப்பட்டதால் முருங்கைக்காயின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கைக்காய் அதிகளவில் விளைகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக உழவர் சந்தைகளில் கிலோ 50 ரூபாய் வரை விற்பனையான முருங்கைக்காய், தற்போது 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு 2 மாதங்கள் வரை தொடர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.