ஐஐடி தன்பாட்டில் குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்த தவறிய பட்டியலின மாணவருக்கு இடமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவருக்கு ஐஐடி தன்பாட்டில் இடம் கிடைத்தது. ஆனால், அதற்கான கட்டணத்தைக் குறித்த நேரத்தில் அவர் இணையவழியில் செலுத்தவில்லை.
இதனால், அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பட்டியலின மாணவருக்கு இடம் வழங்குமாறு ஐஐடி தன்பாட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.