விமானப் படையின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற ஏ.பி. சிங், டெல்லி போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக தனது தாயார் காலில் விழுந்து அவர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விமானப் படை தலைமை தளபதி ஏ.பி. சிங், தற்சார்பு, இயக்கத் திறன் மற்றும் சிறப்பான பயிற்சியை விமானப் படை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.