கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கித்தவித்த குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் கயிறுகட்டி பத்திரமாக மீட்டனர்.
காரமடையை சேர்ந்த ராம், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வச்சினம்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க சென்றார்.
அப்போது திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், அனைவரும் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரை கண்ட அப்பகுதி மக்கள், கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.
பவானி ஆற்றில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி குடும்பத்தினர் ஆற்றில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.