கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி மீதான நில முறைகேடு புகார் தொடர்பாக மைசூரில் லோக்அயுக்தா விசாரணையைத் தொடங்கியது.
மைசூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதில், சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார். இதற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதே விவகாரத்தில் சினேகமயி கிருஷ்ணா என்பவர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, தகுந்த விசாரணை குழு விசாரித்து, 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் மைசூரில் லோக்அயுக்தா விசாரணையைத் தொடங்கியது. அப்போது புகார்தாரர் சினேஹமயி கிருஷ்ணாவும் உடனிருந்தார்.