நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணம் அடைய வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து ரஜினி காந்த் விரைவில் குணம் பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள பதிவில், உலகெங்கிலும் உள்ள ரஜினிகாந்தின் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் நான் நிற்கிறேன், அவர் விரைவாகவும் சுமுகமாகவும் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என ஆதெரிவித்துள்ளார்.