தாய்லாந்தில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் உதய் தானி மாகாணத்திலிருந்து தலைநகர் பாங்காக் நோக்கி பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். பாங்காக்கை நெருங்கியதும் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் பேருந்தில் இருந்த 25 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 16 மாணவர்கள், 3 ஆசியர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு தாயாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.