ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த மாதம் 18-ந்தேதியும், 26 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக கடந்த மாதம் 25-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு மையங்களில் அதிகாலை முதலே குவிந்த வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்முவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். ஜம்மு காஷ்மீர் 3-ஆம் கட்ட தேர்தலில், மதியம் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.