சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெற்றது.
இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி வரும் 6-ம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த வான் சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரிய கிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன.
இதனையொட்டி சென்னையில் அதற்கான ஒத்திகை நடைபெற்றது. அதில் வான்சாகசத்தில் பங்கேற்க உள்ள அனைத்து வகை போர் விமானங்களும் சீறிப்பாய்ந்தன. மெரினா கடற்கரையில் ஒத்திகையில் ஈடுபட்ட விமானப் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசத்தில் ஈடுபட்டனர்.