கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 14ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைதானவர்கள் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 43 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கைதானவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் கைதானவர்கள் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அக்டோபர் 14ம் தேதி ஜாமின் மனு மீது தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார்.