நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசுப்பேருந்து டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தை செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அப்போது முன்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய பேருந்து, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.