சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தமது உன்னத நடிப்பின் மூலம் பெருமை சேர்த்து, நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
சிவாஜி கணேசனின் 97-வது பிறந்தநாளையொட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமது ஈடில்லாத கலைத் திறனால், தமிழ்த் திரையுலகை உலக அளவில் கொண்டு சேர்த்து, தலைசிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் எனக் குறிப்பிட்டுள்ளார்