நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும் இரு நாட்களில் இல்லம் திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை விடுத்துள்ள மருத்துவ குறிப்பில், நடிகர் ரஜினிகாந்த் செப்டம்பர் 30 ஆம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து (Aorta) வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது,
அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக அடைத்தார். (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்).
இந்த நடைமுறை திட்டமிட்டபடி நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.