ஓர் அழகிய ரயில் பயணம் : பட்டியல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் - சிறப்பு கட்டுரை!
Aug 19, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓர் அழகிய ரயில் பயணம் : பட்டியல் வெளியிட்ட ரயில்வே அமைச்சர் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணம் பிடிக்காது என்று யார்தான் சொல்வார்கள்.  அழகான மற்றும் அமைதியான பயணம் என்றால் எப்போதுமே ரயில் பயணம் தான். இந்திய ரயில்வே நவீனமாகி வரும் நிலையில், மகிழ்ச்சியான ரயில் பயணங்களுக்கான ஒரு பட்டியலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி வெளியிட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இரயில் பயணத்தைத் தான் விரும்புகிறார்கள். நண்பர்களுடன்,குடும்பத்துடன், என்றில்லாமல் தனியாக சென்றாலும் இரயில் பயண அனுபவம் சுகமானதே.

இந்தியாவின் இரயில்வே துறை, உலகிலேயே மூன்றாவது பெரிய இரயில்வே அமைப்பாகும். இந்தியாவில் 60000 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட இரயில்பாதைகள் உள்ளன. மேலும் சுமார் 7500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இந்தியாவில், சுமார் 2 கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்திய ரயில்வே, மலைகள் நிறைந்த பகுதிகளுக்கு குறுகிய ரயில்களை இயக்குகிறது. சுரங்கப் பாதைகள்,மலைப் பாலங்கள் மற்றும் வளைவுகள் என இயற்கை காட்சிகளை ரசித்தபடியே பயணிப்பது ஒரு இனிய அனுபவமாகும்.

இந்நிலையில் தான், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பனி நிறைந்த பள்ளத்தாக்குகள் முதல் பரந்த கடற்பகுதிகள் வரை இயற்கை அழகூட்டும் ரயில்வே பயணத்துக்கான ஒரு பட்டியலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஜம்மு & காஷ்மீரில், பனிஹால் முதல் பாத்காம் வரையிலான பனி படர்ந்த பள்ளத்தாக்கை ஒரு அழகிய காட்சியாக விவரித்துள்ள அஷ்வினி வைஷ்ணவ், இந்த ரயில் பயணம் பெரும்பாலும் விசித்திரக் கதை சவாரி போல் உள்ளது என்றும், பயணம் முழுவதும் பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் காண முடிகிறது என்றும் கூறியிருக்கிறார்.

கோவாவில், சங்கேம் தாலுகாவில் அமைந்துள்ள இயற்கையின் அற்புதமான துத்சாகர் நீர்வீழ்ச்சியைக் கண்டு களிக்கும் வகையிலான ரயில் பயணம், சிறந்த அனுபவமாக அமைகிறது என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கல்காவிலிருந்து சிம்லா வரை மலைப்பாதையில் செல்லும் இரயில் பாதை, 800 பாலங்களை உள்ளடக்கியதாகும். இந்த இரயில் பாதை, குறுக்குவெட்டாக, 96-கிலோமீட்டர் செங்குத்தான பாதையாகும். இதற்காகவே கின்னஸ் புத்தகத்தில் இந்த இரயில் பாதை இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிக அழகிய மலை ரயில் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த இரயில் பயணத்தையும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக, நமோ பாரத் ரேபிட் ரயில் மூலம், தார் பாலைவனத்தின் துடிப்பான சாயல்கள் மற்றும் ரானின் வெள்ளை மணலை இரசிக்கலாம் என்று, குஜராத்தின் கட்ச் இரயில் பயணத்தை அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

1908 இல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீலகிரி மலை ரயில், உள்ளூர் மக்களால் ‘பொம்மை ரயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் 115 ஆண்டுகள் பழமையான ரயில் ஆகும். இந்த இரயில் 2005 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்தையும் பெற்றுள்ளது. 46 கிலோமீட்டர் தூரம் ஓடும் இந்த இரயில் பாதை, மேட்டுப்பாளையத்தில் உள்ள சமவெளிகளை குன்னூர் மலைப்பகுதிகளுடன் இணைக்கின்றது.

கேரளாவில், கடலோர நகரமான திருவனந்தபுரத்தின் அமைதியான கடற்கரைகள் மற்றும் தென்னந்தோப்புகள் வழியாக ஒரு அழகிய ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

மலைகள் மற்றும் பசுமையான பசுமையின் கம்பீரமான அழகைக் கடந்து செல்வது மற்றும் ஜன்னல்களிலிருந்து அந்த இயற்கையான சூழலைக் காண்பது நிச்சயம் ஒரு சிறந்த காட்சி அனுபவமாகும்.

Tags: indian railwaysRailway Minister Ashwini VaishnavTrain travelthird largest railway system
ShareTweetSendShare
Previous Post

நடிப்பின் பிதாமகன் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது – சிறப்பு கட்டுரை!

Next Post

செங்கடலில் அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies