செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான எம்.கியூ 9 என்ற அதிநவீன ட்ரோனை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தங்களது அதிநவீன எம்.கியூ 9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அமெரிக்கா பதிலடி தரும் என எதிர்பார்க்கப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.