பழனி மலைக்கோவில் ராஜகோபுரம் சேதம் அடைந்த விவகாரம் தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை சமாளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளதாக பாஜக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்திப் பெற்ற பழனி மலை கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ராஜகோபுரத்தின் ஒரு பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. ராஜகோபுரத்தின் மேல் குரங்குகள் அதிகமாக இருப்பதால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் அடிக்கடி சேதம் அடைவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக பாஜக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் நதது செய்தியாளருக்கு நேர்காணல் அளித்துள்ளார் . அதில்,ராஜகோபுர அலங்கார வளைவில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக சமாளிக்கும் வகையில் அரசு பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இப்படி நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக பணிகள் கூட வேகமாக நடைபெறவில்லை என்றும், கோயில்களில் பக்தர்களுக்கான வசதி போதிய அளவில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கோயில்களில் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் நாச்சியப்பன் கூறினார்.