திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் நீதிபதிகள் கருத்து தெரிவித்ததாக கூறினார்.
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என்ற முடிவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரவில்லை என்று கூறிய பவன் கல்யாண், கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் தேதியில்தான் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தார். மேலும், தேதி குழப்பத்துக்கு ஆந்திர அரசு தீர்வு காணும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.