வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்களுக்கும், இந்திய அணி 285 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் நிர்ணயித்த 95 ரன் இலக்கை இந்திய அணி எளிதாக எட்டியது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணியை இந்தியா ஒயிட் வாஷ் செய்தது.