நாட்டின் பிரச்னையை காங்கிரஸ் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பல்வாலில் அவர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அக்கட்சி அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சிதான் மாநிலத்திலும் அதிகாரத்துக்கு வரும் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாக நீடிப்பதாக கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு கிராமத்திலும் பாஜக ஆதரவு அலை வீசுவதாக பெருமிதம் தெரிவித்தார்.