நாட்டின் சுதந்திரத்தில் பெரும்பங்காற்றிய அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில், அவருடைய தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 155-வது பிறந்த தினம் இன்று.
இந்திய விடுதலையில் அகிம்சை என்பதொரு அறக்கொள்கையை முன்னிறுத்தி, அதன் மூலம், சுதந்திரத்திற்கான போராட்டங்களை வலுப்பெறச் செய்தார்.
உப்புச் சத்தியாகிரகம் போன்ற வரலாற்றில் இருந்து நீங்காத பல வலிமையான அகிம்சை வழி போராட்டங்கள் மூலம், நாட்டின் சுதந்திரத்தில் பெரும்பங்காற்றிய அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில், அவருடைய தியாகங்களைப் போற்றி வணங்கிடுவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.