தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதேபோல், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்டோர் மகாத்மா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.